நாகூர் குலாம் காதிறு நாவலர்
நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ.
ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. புலவராற்றுப்படை, தமிழ்க்கவி மரபுகளைக் காத்துப் போற்றும் சிற்றிலக்கியம். நாவலர், நாவன்மை மிக்கவர் என்று பெயர் பெற்ற, நல்ல தமிழ்ப் பேச்சாளர் இவர். இஸ்லாமிய தமிழ் புலவர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க பெருமை கொண்டவ நாவலர். சாகித்திய அகாடமியின் பதிப்புத்தரம் இந்த நூலிலும் பளிச்சிடுகிறது. -கவிக்கோ ஞானச்செல்வர். நன்றி: தினமலர்,14/9/2014.
—-
வீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம், டாக்டர் கு. பூங்காவனம், பாவை பிரிண்டர்ஸ், சென்னை, விலை 85ரூ.
திரளை உப்பு மருத்துவத்தில் உள்ள மருந்துகள் 12 மட்டுமே. ஆனால் இவை அனைத்தும் நமக்கு வரும் நோய்கள் பலவற்றுக்கும் அருமருந்தாக திகழ்கிறது. அந்த பன்னிரு திரளை உப்புமருத்துவத்தைப் பற்றி தெளிவாக இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.