நாகூர் குலாம் காதிறு நாவலர்
நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. […]
Read more