மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை)

மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), சித்திரக்கதையாக்கம் படம் – காலேப் எல். கண்ணன், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 50ரூ (ஒவ்வொரு புத்தகமும்).

படக்கதையில் விஞ்ஞானிகள் வெறும் கதைகளைவிட சித்திரக்கதைகள் மாணவர்களை அதிகம் கவரும். மேரிக்யூரி, ஆர்க்கிமிடிஸ், அலெக்சாந்தர் பிளமிங், லூயி பாஸ்டியர் ஆகிய விஞ்ஞானிகளின் வரலாறுகள், கண்கவரும் வண்ணப்படங்களுடன், சித்திரக்கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆர்ட் காகிதத்தில், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகங்கள் அமைந்துள்ளன. மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகங்கள்.  

—-

 

ஸ்ரீ அய்யப்பன் சரித்திரமும் படங்களும், ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ், 340/3, கீழத்திருத்தங்கல், சிவகாசி, விலை 150ரூ.

சபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலின் வரலாறு, மற்றும் கோவிலின் சிறப்புகளை அழகிய வண்ணப்படத்துடன் விளக்கும் புத்தகம், படங்களுக்க முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதால் வண்ணமயமாக தகதகக்கிறது. கண்ணாடி பெட்டகத்தில் வைத்ததுபோல ஜொலிக்கும் அய்யப்பன் அட்டைப்படம் அருடை. சபரிமலை தவிர அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எருமேலி தர்ம சாஸ்தா கோவில், பந்தளம் வலியக்கோவில் ஆகிய ஆலயங்களின் படங்களும் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. ஏ. முத்துசாமியின் படங்களுக்கு எம். சிவசுப்பிரமணியம் ரத்தினச்சுருக்கமாய் எழுதிய விளக்கமும் இடம்பெற்றுள்ளது. அய்யப்ப பக்தர் விரும்பும் பொக்கிஷம் இந்த நூல்.  

—-

 

அறந்தாங்கி வட்டார வழக்குச் சொல் அகராதி, அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை,விலை 50ரூ.

சென்னை வட்டார வழக்கு, நெல்லை வட்டார வழக்கு, நாஞ்சில் வட்டார வழக்கு, கொங்கு வட்டார வழக்கு, செட்டிநாடு வட்டார வழக்கு போன்றவகையில் ஆசிரியர் இளங்கோவன் அறந்தாங்கி வட்டார வழக்குச் சொற்களை தொகுத்து வழங்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி 15/2/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *