வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை, ஆர்.எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 127, விலை 100ரூ.

தமிழகத்தில் ஒரு காலத்தில், புஞ்சை பயிர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது. நெல், வாழை, கரும்பு போன்றவற்றை எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாத, பாசன வசதி இல்லாத சூழலில், புஞ்சை பயிர்களான தானிய வகைகள் பெருமளவு விவசாயிகளுக்கு கைகொடுத்து வந்தன. குறைவான தண்ணீரில், கம்பு, கேழ்வரகு, இவற்றுடன் சிறு தானியங்களான வரகு, குதிரை வாலி போன்றவையும் கணிசமாக சாகுபடி செய்யப்பட்டன. ஆனால், இவை நம் உணவில் இருந்து விடை பெற்றதால், விவசாயிகளின் பட்டியலில் இருந்தும் நீங்கின. இப்போது, சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அதை சாகுபடி செய்வது குறித்து, ஆசிரியர் இந்த நூலில் விளக்கியுள்ளார். தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வரும்நிலையில், மாற்று பயிர் குறித்து விளக்கமாக தரப்பட்டுள்ளது. இவற்றுடன் தன் அனுபவங்களின் அடிப்படையில் இயற்கை விவசாயத்தையும் விவரித்துள்ளார். இயற்கை விவசாயத்தின் அடிப்படை கூறுகள் விளக்கமாக தரப்பட்டுள்ளன. இயற்கை உரம், பூச்சி விரட்டி தயாரித்தல் பற்றி கூறியுள்ளார். -ஜே.பி. நன்றி: தினமலர், 27/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *