வாங்க உலகை வெல்லலாம்

வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 144, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-7.html

வெற்றி, தோல்வி இரண்டுமே நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்ததுதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துப் பாருங்கள். வெற்றியின் முதல்படி தெரியும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டாலே நீங்கள் ஒரு வெற்றியாளர்தான். அகந்தையை விட்டொழிப்பது, மென்மையைக் கடைப்பிடிப்பது, எதிர்மறையான எண்ணங்களை மாற்றிக்கொள்வது, தன்னடக்கம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது, முயற்சியுடைய ஆசை, குறிக்கோள்களை அடைய மேற்கொள்ளும் முயற்சிகள், புறக்கணிப்பைக் கண்டு துவளாமல் முன்னேறுவது, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, இன்னும் உலகை வெல்ல என்னென்ன தகுதிகள் உள்ளன என்பதை சான்றுகளுடன் நமக்குக் கற்றுத் தரும் நூல். நன்றி: குமுதம், 5/2/2014.  

—-

 அரண்மனைக்காரத் தெரு, தாழை மதியவன்  மனக்குகை, தாழையான் பதிப்பகம், கடலூர், பக். 152, விலை 75ரூ.

மதராஸ பட்டினத்தில் பழைய வரலாறோடு புதிய சங்கதிகளும் கலந்து காதலைச் சொல்லும் நெடுங்கதை. நன்றி: குமுதம், 5/2/2014.  

—-

பிரபஞ்சத்தின் வேர், ஜேம்ஸ் பிரகாஷ், இரமா பதிப்பகம், 67, கீழத்தெரு, அருமநல்லூர், பக். 364, விலை 125ரூ.

பிரபஞ்சத்தின் துவக்கம், பூமி உருவாதல், உயிரினங்கள் தோன்றுதல், மதங்களின் தோற்றம், கண்டங்கள், தலைவர்கள் என்று ஒரு பிரபஞ்சத்தின் தொகுப்பு நூல். நன்றி: குமுதம், 5/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *