வாலி சிறுகதைகள்
வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை, பக். 112, விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-867-0.html மறைந்த கவிஞர் வாலி எழுதிய ஐந்து சிறுகதைகளும் ஒரு நெடுங்கதையும் அடங்கிய தொகுப்பு. சங்கீத குருவின் மகளை சிஷ்யன் மணக்கும் கலப்பின காதல் கதையை அது அதில் இல்லை நெடுங்கதையில் ரசமாகவும் சங்கீதமாகவும் தந்திருக்கிறார் கவிஞர். என் அப்பாவுக்கு நீதான் பிள்ளை. அவரை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு அற்ப ஆயுசில் கணவன் இறக்க, மாமனாரை பெற்ற தந்தையாகவே பாவித்து அவரிடம் அதீத அன்பைப் பொழியும் பாசமிகு மருமகளின் கதை அனுமார் கோயில் மணியோசை. சுயகாதல் கதை நப்பின்னை சிறுகதை. காதல் காசில்லாதவன் மேல தான் வரும் என்று காசில் ராமகாதையை (குற்றமற்ற ராமன் கதையை) பாடறேன்னு கம்பன் சொன்னதை கவிஞரிடமே நப்பின்னை சுட்டிக் காட்டும் இடம் அருமை. பாவாடை, நாய்வால், பிராந்தி ஆகிய சிறுகதைகளும் சோடையில்லை. சிறுகதையோ, நெடுங்கதையோ இருந்தால் சவுக்காயிருத்தல் வேண்டும். இல்லையேல் சவுக்காரமாயிருத்தல் வேண்டும். இது வாலியின் வாசகம். தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அது போன்றே அமைந்து அவரின் கற்பனை, கவிதைத் திறனைப் பறை சாற்றுகின்றன. நன்றி: தினமணி, 13/10/2014.
—-
ஆறாம் திணை, விடகன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-260-7.html தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம் என்பதை வலியுறுத்தும் நூல். பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான பப் செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளால் உடலுக்கு பலம் ஏற்படுவதில்லை. ஆனால் நோயை வரவழைக்கின்றன. இதைப் பற்றிய தெளிவு இன்மையே முதற்காரணம். இதைத் தெளிவுபடுத்தியும், பாரம்பரிய உணவுகளை சுவையாக எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம். அதன் மருத்துவ குணம் என்ன என்பது பற்றி எல்லாம் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் இந்த நூலை படைத்திருக்கிறார் மருத்துவர் கு. சிவராமன். நன்றி: தினத்தந்தி, 15/10/2014.