விஸ்வரூபம்
விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 57 பி.எம்.ஜி. காம்பிளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை 17, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html
ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்களையும் அதே நேரத்தில் அவர்களது ஆழ் மனதில் வெளிவராமல் அமுங்கிக் கிடக்கும் விகல்பமான எண்ணங்களையும் ஒரே நேரத்தில் கூறி கதை சொல்லி இருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது. அதுவே கதையின் வேகமான ஓட்டத்திற்கு காரணியாகவும் அமைந்து விடுகிறது. கதையின் காலமான 1860ல் தொடங்கி 1940 வரை நெடுகிலும் கதைக்களமாக எடுத்துக் கொள்ளப்பட்ட 3 வெவ்வேறு நாடுகளின் அன்றைய கலாசாரங்கள், 6விதமான மொழி நடைகளில் வெளிப்பட்டு இருப்பது வியக்க வைக்கிறது. நாம் உச்சரிக்க கூசும் சில வார்த்தை பிரயோகங்கள் ஆங்காங்கே இடம் பெற்று இருபபது சற்று நெருடலாக இருந்தாலும், அவற்றை அந்த கலாசாரமும், கதாபாத்திரங்களும் நியாயப்படுத்திவிடுகின்றன. வாழ்வனுபவத்தோடு சொல்லப்பட்ட யதார்த்தமான இந்த கதை அளவிலும் நம்மை ஆட்கொள்வதிலும் பிரமாண்ணடம் என்பதில் ஐயம் இல்லை. நன்றி: தினத்தந்தி, 27/3/13.
—-
வைகோ கடிதங்கள் (பாகம் 3), தொகுத்தவர்-அருணகிரி, ஸ்ரீசிவகாசி ரவிஜி, மனுச்சி பைன் ஆர்ட்ஸ், 50 நாடக சாலை தெரு, சிவகாசி 626123, விலை 50ரூ.
வைகோவின் அரசியல் கட்டுரைகள் கொண்ட புத்தகங்கள் ஏராளமாக வெளிவந்துள்ளன. இது விளையாட்டுகள் பற்றியும், சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவரது கருத்துக்களை எடுத்துக்கூறும் புத்தகம். குறிப்பாக, தெற்கு சூடான் உதித்தது. தமிழ் ஈழம் மலரட்டும் என்ற கட்டுரை சிந்ததிக்க வைக்கிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுபோல் சூடானில் அதிபல் அல் பசீர் இனப்படுகொலை நடத்தினார். இதனால் தெற்கு சூடான் தனி சுதந்திர நாடாக பிரிந்து செல்வதா அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா என்று 2011 ஜனவரியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தனி நாடு பிரிவினைக்கு ஆதரவாக 37,92,518 பேர் வாக்களித்தனர். எதிர்த்து ஓட்டுப்போட்டவர்கள் 44,888 பேர்தான். அதுமட்டுமல்ல, சூடான் அதிபர் அல் பசீர், அகில உலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இனப்படுகொலை நடத்திய குற்றவாளி என்று 2010ம் ஆண்டு ஜுலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எடுத்துக்கூறும் வைகோ தெற்கு சூடான் சுதந்திர நாடு ஆனதுபோல், பொது வாக்கெடுப்பு மூலம் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நன்றி: தினத்தந்தி, 27/3/13.