வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம்

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம், வெளியிட்டவர் ம.மத்தியாசு, திருநெல்வேலி, விலை 600ரூ.

இத்தாலி நாட்டில் பிறந்து இந்தியாவில் தமிழகத்திற்கு வந்து இறைபணி ஆற்றியதோடு தமிழ் மொழியை வளர்த்த வீரமாமுனிவர் வழங்கிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்ற நூலை மூலமும் பதப்பகுப்பும், தொகுப்பும் கொண்டு நேருக்கு நேர் உரை என்ற முறையில் புதுமையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் ம. மத்தியாசு. வீரமாமுனிவர் தந்தருளிய இந்நூல் பழைய ஓலைச்சுவடிகளில் உள்ளதுபோல அடி பிரிக்காமல் தொடர்ச்சியாக உரைநடைபோல் அச்சிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அனைத்தும் புதிய முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்நூல் வாசிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். முனிவரின் நூல்கள் நல்ல முறையில் தமிழரிடையே அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும், தமிழினைப் பல வழிகளில் உயரச் செய்த முனிவரின் பெருமையைப் பறை சாற்றவும் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 27/5/2015.  

—-

பழமொழி நானூறு, புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், சென்னை, விலை 110ரூ.

நானூறு வெண்பாக்களை கொண்டதால் இந்த நூல் பழமொழி நானூறு எனப்படுகிறது. இந்த நூலில் வீட்டு நெறி பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டதுடன், ஒரு சில பழந்தமிழ் முடியுடைவேந்தர் மற்றும் குறுநில மன்னர்களைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/5/2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *