வெற்றிப்படிக்கட்டு

வெற்றிப்படிக்கட்டு, ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன், சென்னை 15, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html

தமிழில் தன்னம்பிக்கை நூல்கள் பல வந்துகொண்டிருக்கும் காலம் இது. ஆனால் ஒரு வெற்றியாளரே தம் அனுபவங்கள் வாயிலாக வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வது உளப்பூர்வமானது. சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று தொழிலதிபராக வளர்ந்துள்ள ஹெச். வசந்தகுமார், புராணம், இதிகாசம், சமகால வாழ்க்கையில் இருந்து குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி, அதன் வழியாக வாழ்வின் யதார்த்தத்தையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் உணர்த்தும் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. பல கதைகளை நாம் அறிந்ததாக இருந்தாலும், அதன் வழியாகச் சொல்ல வருகிறது நீதி ஒரு கணம் நம் விழி உயர்த்துகிறது. வழுவழு காகிதத்தில் ஓவியர் ஸ்யாமின் பொருத்தமான ஓவியங்களோடு புத்தகத்தின் கட்டமைப்பே ஈர்க்கிறது. நன்றி: குங்குமம், 1/10/2012.  

—-

நோய் தீர்க்கும் மணிமந்திர அவுஷதம், என். தம்மண்ணசெட்டியார், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-6.html

வண்ணங்களால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றை வண்ணங்கள் மூலம் சீர் செய்வது எப்படி? நவரத்தினங்களின் குணம், அவற்றால் பயன்பெறுவது எவ்வாறு? இயற்கையான முறையில் நோய்களைத் ததீர்க்க என்ன வழி? என்ற விவரங்கள் விஞ்ஞான பூர்வமாக ஆய்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *