அங்கீகாரம்
அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-274-7.html ஒண்ணாம் வகுப்பு மட்டுமே படித்த சினிமா மற்றும் நாடகக் கலைஞரான துரை, தன் 55 ஆண்டுகால கலையுலக அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக வடித்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங் தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய பணிகள் பிரமிப்பு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, புது வெள்ளம், கண்காட்சி போன்ற படங்களில் நடித்த துரை, எபிசல் என்ற ஆங்கிலப்படத்தில்கூட நடித்திருக்கிறார் என்பது வியப்பு. நடிப்புக் கலையில் கால் பதிக்க ஆசைப்படும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 10/9/2014.
—-
சிற்றுயிரிடம் கற்றுக் கொள்வோம், லூர்து எஸ். ராஜ், வைகறை பதிப்பகம், திண்டுக்கல், பக். 72, விலை 30ரூ.
சிறுவர்களுக்கு அறிவியல் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூகக்கருத்துக்களையும் கதை வடிவில் கொடுத்தால்தான் பிடிக்கும் என்பதை உணர்ந்துள்ளார் ஆசிரியர். அவர்களின் ஆழ்மனத்தில் இக்கருத்துக்களைப் பதிய வைக்க இந்நூலாசிரியர் இயற்கையையும் சிற்றுயிர்களையும் துணைக்குக் கொண்டுள்ளது சிறப்பு. சிறார்களின் உலகத்திற்குள் நுழைந்து, அவர்களது பார்வையிலேயே இந்நூலைப் படைத்திருக்கிறார். ஓநாயை வென்ற ஆடு, ஏளனம் பேசிய எறும்பு, தேனீ பெற்ற முத்து என்று சிற்றுயிர்களை ஆசானாக்கி சிறார்களுக்கு கற்றுதரும் உத்தி சிறுவர்களைக் கவரும். நன்றி: குமுதம், 10/9/2014.