அசுரன்

அசுரன், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பி லிட், சென்னை, விலை 395ரூ.

இலங்கை அரசன் ராவணன் மற்றும் அவனது அசுர இன மக்களின் வீரக் கதையை எடுத்துக் கூறுகிறது இப்புத்தகம். ராமாயணத்தில் அறியப்படாத ஒரு பழங்கதையை இந்நூல் கூறுகிறது. அசுரன் கதையில் ராவணின் மகள் சீதை. சீதை அசுரகுலத்து அரசியாக வளரவில்லை என்றாலும் அவள் அவனுடைய மகள். அவளுடைய நல்வாழ்க்கைக்காக ராவணன் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் தவறாகப் போக, அவனது உடன்பிறப்புக்களும் மகனும் மாண்டு போகிறார்கள். இறுதியில் அவனே கொல்லப்படுகிறான். அசுரகுலம் அழிந்து போகிறது. ராவணன் புரிந்து கொள்ளப்படாதவனாகிறான். இக்கதையை, நூலாசிரியர் ஆனந்த் நீலகண்டன், கற்பனை கலைவண்ணத்தோடு புனைந்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இக்கதையை நாகலட்சுமி சண்முகம் எளிய தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.  

—-

ஞானப்புரட்சி, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

ஓஷோ 35 ஆண்டுகளுக்கு மேலாக அருவியாய் பொழிந்த பேச்சுக்களின் தொகுப்பு நூல். இன்றைய சமுதாயம் எதிர்கொண்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கும், வெகு அவசரமான சமூகப் பிரச்சினைகளுக்கும் விடைதேடும் தனி நபர்களின் தேடல் தாகத்தைத் தனிப்பவர், ஓஷோ. மதம், தேசம், இனம், மொழி போன்ற எந்த ரகமான பிரிவையும், கும்பலையும் எதிர்ப்பவர். இன்றைய விரைவுயுக வாழ்க்கையை நெறிப்படுத்துவதற்கான அகமாற்று அறிவியலையும், தியான அணுகுமுறையையும் தந்த ஒரு புரட்சியின் மறுவடிவம்தான் ஓஷோ. ஓஷோவின் சிந்தனை ஓட்டங்கள் முழுவதிலும் ஊடும் பாவுமாகக் கலந்துள்ளது அவரது தொலைநோக்குப் பார்வை. கீழை நாட்டின் காலங்களைக் கடந்த ஞானக் கருவூலமும், மேலை நாட்டின் மேன்மையான அறிவியல் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது. அந்தத் தீர்க்க தரிசனம். அதைப் புரிந்துகொண்டு, நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தினால், மனித இனத்தின் தராதரத்தில் ஒரு புரட்சி மலரும். ஓஷோ ஆங்கிலத்தில் படைத்ததை எளிய தமிழுக்கு மாற்றியிருக்கிறார் சுவா சியாமானந்த். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *