அடிமையின் காதல்
அடிமையின் காதல், ரா.கி. ரங்கராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 4, பக். 456, விலை 205ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-4.html
எழுத்துலகில் பன்முகம் கொண்ட ரா.கி.ரங்கராஜனின் இன்னொரு அவதாரம்தான் இந்த சரித்திர நாவல். வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலத்துப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இந்திய ஆங்கிலேயே உறவின் பதிவே ஒரு சரித்திரமாக விரிகிறது. சென்னை நகரில் நடந்த அடிமை வியாபாரம்தான் நாவலின் அடிநாதம். நம்முடைய சென்னை இப்படியும் இருந்ததா என கேட்க வைக்கிறது. சென்னை பட்டணத்தில் வெள்ளைக்காரனுக்கும் நமக்குமான ஒரு வாழ்வியல் நேசம் சிலிர்க்க வைக்கிறது. நன்றி: குமுதம், 19/3/2014.
—-
முடிசூடா ராணிகள், இ.எஸ். லலிதாமதி, ஆர்.எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-5.html
நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் நாடுகளை ஆட்சி செய்த அரசிகள், அரசர்களின் பின்புலமாக இருந்துள்ளனர். இவர்களை பற்றி தெரிந்துகொள்வதற்காக, கோப்பெரும் பெண்டு, அங்கவை, சங்கவை, செம்பியன் மாதேவி, பெண்ணரசி பேசும் ரசியா போன்ற ராணிகள் உட்பட பல்வேறு ராணிகளின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வடிக்கப்பட்டுள்ளது. ராஜாதி ராஜ, ராஜ கம்பீர என்ற வாழ்த்தொலி ராஜாக்களுக்கு மட்டுமல்லாது ராணிகளுக்கும் சொந்தமானது என்பதையும் நூல் மூலம் அறிய முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 12/3/2014.