அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ். விகடன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு  என்கிறோம். ஆனால் இந்த 7 அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. வடஅட்லாண்டிக் சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது. அந்த வழியாகச் செல்லும் விமானங்களும், கப்பல்களும் காணாமல் போகின்றன. அதற்குக் காரணம் என்ன? உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் 37 நாடகங்களை எழுதியதாக பொதுவாகக் கருதப்பட்டாலும், அவற்றை உண்மையில் அவர்தான் எழுதினாரா? அல்லது வேறு யாராவது எழுதினார்களா? உலக மாவீரன் நெப்போலியன் போரில் தோல்வி அடைந்து, ஒரு தீவில் சிறை வைக்கப்பட்டார். அப்போது அவர் திடீரென்று தமது 51 ஆவது வயதில் இறந்துபோனார். அவர் எப்படி இறந்தார்? விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா? சீனப் பெருஞ்சுவருக்குள் பல பிணங்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையா? ரஷிய அதிபர் ஸ்டாலின் மனைவி மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இப்படி 37 மர்மங்கள் குறித்து இந்நூல் ஆசிரியர் ஜி,எஸ்,எஸ். சுவைபட எழுதியிருப்பதோடு மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கிறார். நன்றி: தினத்தந்தி.  

—-

நிலவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது, ஸ்ரீரமா, திருமால் நிலையம், சென்னை, விலை 100ரூ.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதற்கு இணங்க ஒவ்வொரு வீடுகளிலும் நடக்கும் கதையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *