அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி

அதிநவீன அர்ஜுன் முதன்மைப் போர் ஊர்தி, ச. பொன்ராஜ், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆவடி, சென்னை 600054, பக். 34+230.

நம் நாட்டின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி பணிகள் பற்றி, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. அர்ஜுன் போர் ஊர்தி பற்றியும், அதன் வடிவமைப்பு முறைகள் பற்றியும், சாதாரணமானவர்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், நூலாசிரியர் விளக்கியுள்ளார். தரம் மிக்க தாளில், வண்ணப்படங்கள் சிறப்புடன் அச்சிடப் பெற்றுள்ளன. மாணாக்கர்கள் பாதுகாப்பு துறைப் பணிகளில் ஈடுபட, இந்நூல் தூண்டுகோலாய் அமைந்துள்ளது எனலாம். போர் ஊர்திகளின் தொழில் நுட்பங்களும், அவற்றின் தோற்றத்தினை விளக்கும் படங்களும், பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. இத்துறைச் சாதனையாளர்கள் பற்றிய செய்திகள், தொகுக்கப்பெற்றுள்ளன. 1970-2012 ஆம் ஆண்டுகளின் நிகழ்வுகளை, கால வரிசைப்படி தொகுத்தளித்துள்ள நூலாசிரியர் பொன்ராஜ், நம் பாராட்டுக்குரியவர். இந்நூல் போர் ஊர்தி பற்றிய தொழில்நுட்ப ஆய்வு நூல் ஆகும். எல்லாரும் படித்துப் பயன்பெறலாம். -பேரா. ம. நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர், 21/7/13.  

—-

  வரப்பெற்றோம் உயிரினப் பன்மயம், தொகுப்பாசிரியர்-ப. இ. ரெய்மண்ட் ஜோசப், தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி 1, பக். 211, விலை 65ரூ. சிரிப்பே சிறப்பு, மலையமான், அன்புப் பதிப்பகம், சென்னை 18, பக். 144, விலை 60ரூ. காணாமல் போன நோய்கள், மலர் மருத்துவ நோய் வரலாறுகள், மரு.கு. பூங்காவனம், மரு. நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக். 80, விலை 60ரூ. கல்லும் முள்ளும் கவிதைகள், கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர் முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 160, விலை 115ரூ. நெடுநல்வாடையும் புனித ஆக்னிக நற்பொழுதும் ஓர் ஒப்பாய்வு, இராம. குருநாதன், விழிகள் பதிப்பகம், 8/எம். 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக். 112, விலை 85ரூ. ஸ்ரீகுமரகுருபர அடிகள் சுட்டும் தன் முன்னேற்றக் கருத்துகள், க. கதிரசன், குன்றக்குடி ஆதீனம், குன்றக்குடி 630206, பக். 152. விலை 75ரூ. சேனைத் தலைவர் வாழ்வியல், சு. விவேகலதா, காவ்யா, சென்னை 24, பக். 226, விலை 170ரூ. ஸ்ரீ வியாசபகவான் அருளிய மோக்ஷதர்மம் (மஹா பாரதம் – சாந்தி பர்வம் 2) எளிய தமிழில் இனிய சாரம், டி. எஸ். ராமஸ்வாமி, பக். 264, விலை 150ரூ. தமிழ் ஒளியின் மக்கள் கவிதைகள், கவிஞர் தமிழ்ஒளி, அன்னை முத்தமிழ் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 160, விலை 120ரூ. கந்தனுக்கோர் செந்தமிழ்ப் பாமாலை, தி.சு. கலியபெருமாள், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 220, விலை 140ரூ. நன்றி: தினத்தந்தி, 22/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *