பணம் பணம் பணம்
பணம் பணம் பணம், வேங்கடம், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 160, விலை 75ரூ.
To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0000-834-2.html
எங்கு பார்த்தாலும் பணம்… பணம்… பணம்… என்று பணத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்தும் இயங்கி வருகின்றன. ஆனால், பணத்தைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் படும் பாடு சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் இல்லாமல் மனிதன் மகிழ்ச்சியாக, நிம்மதியாக, பதற்றமற்று வாழ்க்கையைத் தள்ள முடியுமா? முடியும் என்கிறார் நூலாசிரியர். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தும் பொதுவாக இருந்து, எல்லோருக்கும் எல்லாம் சொந்தம் என்று ஆகிவிட்டால், பணம் இல்லாமல் வாழ்வது சாத்தியமே என்பதை நயம்பட, பல்வேறு எடுத்துக்காட்டுகள், சுவாரஸ்யமான நிகழ்வுகளோடு விளக்கி இருப்பது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நூல் முழுவதும் உள்ள அறிஞர்களின் பொன்மொழிகள் அதற்குச் சான்றாக உள்ளன. பணம், வங்கி, கடன், வட்டி போன்ற அனைத்தும் மனிதர்களை ஒரு வகையில் பயமுறுத்தி வருவது குறித்தும், பணம் இல்லாமல் வாழ்வதுதான் இயற்கையின் தர்மம் என்பது குறித்தும் ஆணித்தரமாக தெளிவுபடுத்தியுள்ளார். நன்றி: தினமணி, 24/10/11
—-
நம் முன்னோடிகள் பாகம் 1, முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், 5/15, வைத்யராமன் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 128, விலை 80ரூ.
பல துறைகளிலும் தமிழகத்தை மேம்படுத்திய நல்லோர்கள் வரலாறு என்று தலைப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ரைட் ஹானரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார், உ.வே.சா. பெரியார், எஸ்,எஸ். வாசன், கல்கி, அரியக்குடி, அண்ணா, பாரதியார், முத்துராமலிங்கத் தேவர், சிவாஜிகணேசன், ஏ.டி. பன்னீர் செல்வம், பால சரஸ்வதி, என்.எஸ். கிருஷ்ணன், பாபநாசம் சிவன், டி.ஆர், ராஜகுமாரி, எம்.எஸ். சுப்புட்சுமி, நாடி முத்துப் பிள்ளை என்று பலரது வாழ்க்கையை சிறப்புள்ளதாக மாற்றியது நமது முன்னோடிகள் வரலாறு சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்திற்கு பெரிதும் உதவும். -எஸ். திருமலை. நன்றி; தினமலர், 09/10/11.