அநீதி, நீதி, சமூக நீதி
அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html
ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.
—-
இலக்கியமலர்கள், துரை. நமசிவாயம் எம்.ஏ.பி.டி., குகன் பதிப்பகம், 124/12, கணபதிநகர், மாம்பழச் சாலை, திருச்சி 620005, பக். 128, விலை 40ரூ.
இருபத்தியேழு கட்டுரைகள் அடங்கிய தொகுதி. இன்னாநாற்பது, நாலடியார், பெரியபுராணம் பற்றியெல்லாம் ஆசிரியர் விரிவாகப் பேசுகிறார். கபீர்தாசரின் சிந்தனைகள் குறித்து விளக்குகிறார். கபீர் தாசரும், வள்ளலாரும் என்ற ஒப்பாய்வு ஆழமானது. ராமனும் ரஹீமும் ஒன்றே என்பது கபீர்தாசரின் கொள்கை. வள்ளல் பெருமானும் தெய்வம் பல என்று சொல்லப்பட்ட செய்திகளுக்குச் செவி சாய்க்கவில்லை என்று சுட்டுகிறார். பாரதியின் மதம் என்ற கட்டுரையில் அன்பு செய்வதே பாரதியின் மதம் என்கிறார். இலக்கிய மணமும், ஆன்மிக மணமும் கமழும் நூல். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 6/11/2011.
—-
இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு, எம். கே. நாயக், தமிழில் வெ. அயோத்தி, கு. குணசேகரன், சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 533, விலை 260ரூ.
ஒரு நாட்டின் இலக்கிய வரலாற்றை அந்நாட்டில் உள்ள மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளை வைத்து வரையறுத்துவிடமுடியும். ஆனால் இந்தியா போன்ற பிறநாடுகளில் எழுதப்படும் ஆங்கில படைப்புகளை வரையறுப்பதில் தொடக்கக் காலத்தில் குழப்பம் இருந்தது. இதை நிவர்த்தி செய்யும் விதமாக, இந்திய ஆங்கில இலக்கியத்தை பிறப்பால், குடியுரிமையால் பரம்பரை பரம்பரையாக இந்தியாவில் வாழ்ந்து வந்த எழுத்தாளர்களின் படைப்பு என்று நூலாசிரியர் வரையறுக்கிறார். இரண்டாம் பாகத்தில், இந்தியாவுடனான பிரிட்டனின் தொடர்பு குறித்த வரலாறு தொடங்கி 1757ஆம் ஆண்டு பிளாசி யுத்ததிற்குப் பிறகு, கிழக்கு இந்தியக் கம்பெனி வங்காளத்தின் உரிமை பெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷாரின் ஆட்சி இந்திய ஆங்கில இலக்கியத்தின் உதயம் என்று விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தால் மேலை நாட்டுக் கருத்துகளின் தாக்கத்தினால் ஐரோப்பியக் கல்வியை ஆழமாகக் கற்கும் வாய்புக் கிடைக்கப்பெற்றது. அதைத் தொடர்ந்து, மெக்காலே கல்வி திட்டம் அறிமுகம் என நீண்ட வரலாற்றை இந்நூல் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் முதல் நில அளவை ஜெனரலான மெக்கன்ஸியின் உதவியாளராக இருந்தவர் காவெள்ளி வெங்கட பொரையா. இவர் 1803ஆம் ஆண்டு எழுதிய ஜைனர்களைப் பற்றிய விவரம் என்ற கட்டுரையே ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிரசுரமான முதல் கட்டுரை என்ற வரலாற்றுத் தகவல் இடம் பெற்றுள்ளது. ராஜா ராம் மோகன் ராய் உள்ளிட்ட தொடக்கக் கால எழுத்தாளர்களையும் ஆரம்பகால உரைநடை, கவிதை விவரங்களையும் கவனத்துடன் பதிவு செய்துள்ளார். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றைக் கூறும் இந்நூல், இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆங்கில இலக்கிய வரலாறு பயிலும் மாணவர்களுக்கும் அரிய பல தகவல்களை அளிக்கிறது. நன்றி: தினமணி, 1/7/2013.