அன்னை தெரசா
அன்னை தெரசா, பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ.
ஏழைகள் நிலவில் இருந்தால், அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத்தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைத்த தெரசாவின் வாழ்க்கை வரலாற்று நூல். தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது, சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான், பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் இமயமாக உயர்ந்தார். அவரது சேவையின் ஒவ்வொரு அங்குலத்தையும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் பா. தீனதயாளன். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.
—-
சிவா ஐ.ஏ.எஸ். என்.ரிசிகேசன், நவமணி வெளியீடு, விலை 150ரூ.
நாட்டை ஆளத்துடிப்பவர்களுக்கும், ஓட்டுபோடும் மக்களுக்கும், அலுவலகப் பணியாளர்களுக்கும், அறிவுபூர்வமான நல்ல சிந்தனைகளை விதைக்கும் சிறுநாடகமாகும். நன்றி: தினத்தந்தி, 9/12/2015.