அறச்சீற்றம்
அறச்சீற்றம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞா. சிவகாமி, அவருடைய சிறுகதைத் தொகுப்பு இது. சில எழுத்தாளர்கள், சிறுகதைகளை குறுநாவல் அளவுக்கு இழுப்பார்கள். இவர் நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு மேல் போவதில்லை. கதைகள் சுருக்கமாக இருந்தாலும் சுருக் என்று நெஞ்சில் குத்துகின்றன. அவ்வளவு வர்மையான எழுத்ததுக்கள். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.
—-
நல்லறம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 30ரூ.
சமயோசித பத்ய மாலிகா என்ற பழமையான வடமொழி நூலில், சிந்தனைக்கு உரிய கருத்துக்களும், உபதேசங்களும் நிறைந்துள்ளன. அவற்றை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் திருமுருக கிருபானந்த வாரியார். நன்றி: தினத்தந்தி, 2/9/2015.