மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்)

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ.

தமிழ்நாட்டில் பிறந்து, பிரெஞ்சு படையில் பணி புரிந்து பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து போர்த் தளபதியாக உயர்ந்தவன் மருதநாயகம். முஸ்லிம் மதத்தில் சேர்ந்ததால் யூசுப்கான் என்றும் கான் சாகிப் என்றும் அழைக்கப்படுகிறான். தீரமும், வீரமும் மிக்க மருதநாயகத்தின் வரலாற்றை எழுத்தாளர் பாஸ்கரதாஸ் எழுதியுள்ளார். தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டவன், மருதநாயகம். பிற்காலத்தில் அவர்களின் அடக்குமுறையை தாங்கிக் கொள்ள அவனது தன்மானம் இடம் தரவில்லை. எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு தூக்கில் இடப்படுகிறான். வெள்ளையர்கள் காலுன்றக் காரணமாக இருந்தபோதிலும், மருதநாயகத்தின் வீரம் போற்றுதலுக்குரியது. இதைச் சில கற்பனை பாத்திரம் கலந்து நாவலைப்போல சுவையோடு ஆசிரியர் எடுத்துச் சொல்லும் பாங்கு பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.  

—-

நினைவு அலைகள், வசந்தா பதிப்பகம், விலை 150ரூ.

நாடக உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலாநிகேதன் பாலு. அவருடைய அனுபவங்களை இந்த நூலில் விவரித்திருக்கிறார். பிரபல தலைவர்கள், நடிகர், நடிகைகள், பிரமுகர்கள் ஆகியோரைப் பற்றி சுவையான விஷயங்களை அறிய முடிகிறது. நிழற்படங்கள் நிறைய இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *