அளவீடற்ற மனம்
அளவீடற்ற மனம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 225ரூ.
தத்துவ மேதை ஜே. கிருஷ்ண மூர்த்தி டெல்லி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் அக்டோபர் 1982 – ஜனவரி 1983க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பு. அவரது ஆங்கில உரையைத் தமிழில் எம்.ராஜேஸ்வரி மொழிபெயர்த்துள்ளார். குழப்பத்திற்கான அடிப்படைக் காரணம், ஒழுங்கின்மை என்றால் என்ன? துக்கத்தைப் போக்குவது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு அவருக்கே உரித்தான பாணியில் பதில் சொல்கிறார். மேலும் நெஞ்சத்துள் இருக்கும் மனம் எனும் அருமையான கண்ணோட்டத்தையும் அவர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். நன்றி: தினத்தந்தி, 21/10/2015.
—-
நதியே பெண் நதியே, மேகலா சித்ரவேல், ஆர்.ஆர்.நிலையம் வெளியீடு, சென்னை, விலை 110ரூ.
சாரதா, தில்லைநாயகி உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் புனையப்பட்ட நாவல், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை இந்த நூல் எடுத்துக்கூறுகிறது. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.