ஆடத்தெரியாத கடவுள்

ஆடத்தெரியாத கடவுள், நீதிபதி எஸ்.மகாராஜன், விகடன் பிரகரம், 757 அண்ணாசாலை, சென்னை – 2; விலை ரூ. 150 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-722-2.html

  ஒரே சமயத்தில் இரட்டைக் குதிரைகள் மீது சுவாரி செய்து, சரியான இலக்கை அடைந்து வெற்றிக்கனியைப் பறித்து இருக்கிறார், நீதிபதி எஸ்.மகாராஜன். இலக்கியம், நீதி என்ற இரு வேறு துறைகளில் தனக்குள்ள புலமையை அருமையான கட்டுரைகளாக ஒருசேர வார்த்தெடுத்து இருக்கிறார். அனைத்து கட்டுரைகளிலும் ஏராளமான இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி, தன்னை சிறந்த இலக்கியவா தியாகவும், நீதித்துறையில் கிடைத்த சிறந்த அனுபவங்களின் மூலம் நடுநிலை தவறாத நீதிமானாகவும் அவர் பரிமளிப்பதை புத்தகம் நெடுகிலும் காணமுடிகிறது. ரசிகமணி டி.கே.சி. பற்றிய தகவல்கள் உள்பட அனைத்து கட்டுரைகளும் பல்சுவை களஞ்சியமாக அமைந்துள்ளன.  

 

மருந்தில்லா மருத்துவம்!, உலகத் தமிழர் பதிப்பகம், 4, சவுராஷ்டிரா நகர், 7-வது தெரு, சூளைமேடு, சென்னை – 94; விலை ரூ. 100

  பொதுவாக, நோய் என்றால் அதை குணப்படுத்த மருந்து சாப்பிடுவதுதான் முக்கியம் என்று எண்ணுகிறோம். சில நோய்களுக்கு மருந்தில்லா மருத்துவம் (இயற்கை வைத்தியம்) அவசியம். இதுபற்றி டாக்டர்கள் மு.குமரேசன், நவீன் குமரேசன் ஆகியோர் எழுதியுள்ள நூல் “உள தாயிரு.” இயற்கை வைத்தியம் பற்றியும்,  அதற்கான உடற்பயிற்சிகள் பற்றியும் பயனுள்ள ஆலோசனைகளைக் கூறுகிறார்கள். இயற்கை வைத்தியம் பற்றி, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளையும் எடுத்துக் காட்டியுள்ளனர். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் நூல்.  

 

கலிங்கத்துப்பரணி, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை – 17; விலை ரூ. 175

  கலிங்கத்தில் நிகழ்ந்த போரை உணர்த்தும் பரணியென்னும் நூலிது. பரணி என்பது 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று, ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைவன் ஒருவனை சிறப்பித்துப் பாடுதல் மரபாகும். விசயதரன் என்னும் முதலாம் குலோத்துங்க சோழன் தனது படைத்தலைவனும், மந்திரத் தலைவனுமாகிய கருணாகரத் தொண்டைமானை ஏவி, கோதாவரி நதிக்கு அப்பால் வடக்கிலும், மகாநதிக்கு தெற்கிலும் உள்ள கலிங்க நாட்டை அழித்து அந்நாட்டிற்கு இறைவனாகிய அனந்தபத்மனை வென்ற செய்தியை கவிச்சக்கரவர்த்தி சயங்கொண்டார் விவரித்துப் பாடியுள்ளார். இதில் 596 தாழிசைப் பாடல்கள் உள்ளன. இத்தாழிசைப் பாடல்களுக்கு உரையாசிரியர் ஆ.வி.கன்னைய நாயுடு பதவுரையும் விளக்கவுரையும் எளிய நடையில் கொடுத்திருப்பது சிறப்பு. இது கற்றோர் மனதைக் கவரத்தக்கதாம்.   நன்றி: தினத்தந்தி 07-11-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *