தென்னிந்திய சவுராஷ்ட்ர சமூக வரலாறு
கடலங்குடியின் மகாபாரதம், சசிரேகா, கடலங்குடி பதிப்பகம், 38, நடேச அய்யர் தெரு, தியாகராய நகர், சென்னை – 17; விலை ரூ. 80
மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தை 168 பக்கங்களில் சுருக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மகாபாரதத்தை சுருக்கமாக அரிய இந்நூல் பெரிதும் உதவும்.
—
ஸ்ரீமாரியம்மனின் வரலாறு வழிபாடு அவதாரம், சு.சக்திவேல், வெளியிட்டோர்: எல்.தங்கவேலு, அயன்பொருவாய் (அஞ்சல்), பாலக்குறிச்சி (வழி), மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம், விலை ரூ.100
மாரியம்மன் வழிபாடுகளில் உள்ள பல முறைகள் சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளன. உடுக்கை அடிப்பதன் காரணம், கரகாட்டம் ஏன் என்பது போன்ற பல தகவல்களும் அடங்கியுள்ளன. மாரியம்மன் பக்தர்கள் படிக்கவேண்டிய நூல்.
—
தென்னிந்திய சவுராஷ்ட்ர சமூக வரலாறு, பெரியகுளம் குப்பா அ.ரெங்கராஜன், ராஜா வெளியீடு, 10, இப்ராகிம் நகர், காஜாமலை, திருச்சி – 23; விலை ரூ. 200
சவுராஷ்ட்ர மக்களின் வாழ்க்கை முறை, திருமண முறை, நெசவுத் தொழில், சாயத்தொழில், அச்சமூகத்தில் உள்ள பிரபலமானவர்கள் (டி.எம்.சவுந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், வெண்ணிற ஆடை நிர்மலா) பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்.
—
இளந்தளிர், சிவபுரி பதிப்பகம், 81-1, வைக்கோல்காரன் தெரு, புரசைவாக்கம், சென்னை – 7, விலை ரூ. 40
எளிமை, இனிமை, காலத்திற்கேற்ற புதிய கருப்பொருள் சார்ந்த, சிந்தனைத் திறன் கொண்ட 72 குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நூல். பெரியவர்கள் பாடல்களை ரசித்து சுவைத்து, குழந்தைகளுக்கு கருத்துகளை ஊட்டலாம். படிக்கத் தூண்டலாம். நன்றி: தினத்தந்தி 07-11-12