ஸ்பெஷல் யோகா
ஸ்பெஷல் யோகா, தஞ்சை சக்தி.ரமேஷ், வெளியிட்டோர் – சாமி ஆப்செட், 10/6, மெக்ளீன் தெரு, சென்னை – 1; விலை ரூ.160
யோகாசனங்களால் ஏற்படும் பயன்களை விளக்கமாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் ஆசிரியர். முக்கிய யோகாசனங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன.
—
காலம், தேவவிரதன், வசந்தா பிரசுரம், 15 ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33; விலை ரூ. 120
ஆசிரியர் எழுதிய 28 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
—
பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மீகமும், கே.எஸ். ரமணா, விஜயா பப்ளிகேஷன்ஸ், 317, என்.எஸ்.கே.சாலை, வடபழனி, சென்னை – 26; விலை ரூ. 50
சிறிய புத்தகம்தான். ஆனால், இதில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு, பாரதியார் பற்றி பேரரறிஞர் அண்ணா, பாரதிதாசன் உள்பட தலைவர்களின் கருத்துகள், பாரதியார் பற்றிய அபூர்வ செய்திகள் அடங்கியுள்ளன. படிக்கவேண்டிய புத்தகம்.
—
பிறந்த தேதியும் வரும் நோய்களும் சிகிச்சை முறைகளும், ஜவ்வை இஜெட், வெளியிட்டோர் : முஜுப் இண்டியா கிரியேஜன், ஜி2. ஸ்ரீஅமம்மன் நகர், அம்பாள் நகர் பாலாஜி அவென்யூ, மாங்காடு, சென்னை – 122; விலை : ரூ. 140
ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் தெரிந்தாலே போதும், அதை வைத்து எந்த நோய் வரும் அதை எப்படி நீக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நியூமராலஜியுடன் யோகாசனம், பிராணாயாமம், தியானம் இவற்றை இணைத்து எழுதப்பட்ட நூல்.
—
மாறிவரும் சமுதாயத்தில் மனிதன், முனைவர் மு.முருகேசன், கண்மணி வெளியீடு, கே.2-4, அலுவலர் குடியிருப்பு, அண்ணா பல்கலைக்கழக வளாகம், கிண்டி, சென்னை – 24; விலை ரூ. 60
மாறிவரும் சமுதாயத்தில் மனிதனின் நிலை என்ன? மனித வாழ்க்கை என்பது என்ன? பிறந்து உயிர் வாழ்ந்து மடிவதுதான் வாழ்க்கையா? எல்லாம் இருந்தும் மனதில் மகிழ்ச்சி இல்லையே! ஏன்? எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்தபடி நடக்கவில்லையே ஏன்? இதுபோன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டி சிந்தித்ததன் விளைவாக, சமூக சேவை நோக்குடன் இந்நூலைப் படைத்திருக்கிறார் முனைவர் மு.முருகேசன். நன்றி: தினத்தந்தி 07-11-2012