ஆனந்த விநாயகர்

ஆனந்த விநாயகர், டாக்டர் பாலமோகன்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், பக். 256,விலை 195ரூ.

விநாயகப் பெருமான் ஞானகாரகன். அவ்வைப் பிராட்டிக்கு முத்தமிழைத் தந்த வேத முதல்வன். ஆனந்த விநாயகர் வரலாறு, புராணக் கதைகள், விநாயக பிம்பத்தின் சிறப்பு, அணிகலன்கள், வாகனம், ஆயுதங்கள், திருவிழாக்கள், திருத்தலங்கள், இந்திய நாடு மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள், பூஜை, சடங்குகள், நைவேத்தியங்கள், மந்திரங்கள், அகவல்கள் என மிக்த தெளிவாக ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று புறந்தள்ளாது, மூல நூல் போன்ற வாசிப்பை இந்நூல் வழங்குகிறது. தமிழில் தந்த திவாகர், தமிழ் எழுத்துலகில் கடந்த 30 ஆண்டுகளாக கால் பதித்து, பல வரலாற்றுப் புதினங்களைத் தமிழ் வாசகர்களுக்கு விருந்தாய் சமைத்தவர். நல்ல கட்டமைப்போடு, நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. -குமரய்யா.  

—-

 

நெஞ்சில் நிலைத்தவர்கள், கரிகாலன், தோழமை வெளியீடு, பக். 304, விலை 225ரூ.

மனிதராய் பிறந்தோர் அனைவரும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதில்லை. தங்களின் அறிவின் துணை கொண்டு, தன்னலம் கருதாது, தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் தொண்டு செய்வோர், மக்கள் நெஞ்சில் நிரந்தரமாக நிலைத்து இருப்பர். தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களாக விளங்கிய, 70 பேர்களின் தமிழ்த் தொண்டு, சமுதாயப் பணி முதலியன இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள், இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் தொண்டுகளைப் படித்தால், வாழ்க்கையின் சிறப்பு மேலோங்கும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 16/6/2013.

Leave a Reply

Your email address will not be published.