இதய சூத்திரம்
இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ.
உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.
—-
குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு.
இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை சித்தரிக்கும் நுலாகும். இதில் மனிதர்களின் பலத்தையும், பலவீனங்களையும் கதாபாத்திரங்கள் மூலம் நூலாசிரியர் நன்றாக படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.