இந்தியக் கலை வரலாறு
கணக்கில் உங்க குழந்தையும் மேதையாகலாம் (2ம் பாகம்),ஆர். உமாசங்கர், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83, விலை 160 ரூ.
குங்குமம் இதழில், ‘இனிக்குது கணக்கு’ என்ற பெயரில் வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தொடரின் நூல் வடிவம். ‘கணக்கென்றால் பிணக்கு’ என்ற மாயையைத் தகர்த்து, மிகப்பெரும் கணக்குகளுக்கும் நொடிப்பொழுதில் விடை சொல்லும் சூட்சுமங்களைக் கற்றுத்தரும் இந்நூல் எல்.கே.ஜி. முதல் இன்ஜினியரிங் வரை எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் அதிவேகத்தில் விடை கண்டறியும் நுட்பத்தையும் கற்றுத் தருகிறார் நூலாசிரியரான மூத்த பத்திரிகையாளர் ஆர். உமாசங்கர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் படித்து, பயன்படுத்தத் தகுந்த இந்நூல், வீடுகளில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்களில் கட்டாயம் இடம் பெறவேண்டியது.
—
இந்தியக் கலை வரலாறு,Dr. M. சாலமன் பெர்னாட்ஷா, P.முத்துக்குமரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098, விலை 350 ரூ.
இந்தியக் கலைகளின் வரலாறு ஒரு விதத்தில் இந்திய அரசியல் மற்றும் பண்பாட்டின் வரலாறு. கலைகளின் வாழ்வும் அழிவும் அரசியல் அதிகாரங்களின் வெற்றியோடும் வீழ்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பண்பாடுகளுக்கு இடையே நடந்த பரிமாற்றங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த நூலாசிரியர்கள் இந்தியக் கலைகளின் பிரமாண்டமான வரைபடத்தை கடும் உழைப்பின் வழியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். கலை மரபுகளுக்கு இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகள், ஸ்தூபிகள், சிற்பிகள், குடைவரைக் கட்டுமானங்கள் எனப் பல்வேறு கலை வடிவங்களுக்குப் பின்னே இருக்கும் அழகியல் மற்றும் வரலாற்றுப் பின்புலம் பற்றிய விரிவான பதிவினை இந்த நூல் வழங்குகிறது. இந்தியக் கலைமரபுகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மிஞ்சியிருக்கும் நமது கலை அடையாளங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒரு பொது வாசகனுக்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல். நன்றி: குங்குமம் 24-09-12