இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்
இந்தியச் சூழலும் முஸ்லிம்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, விலை 60ரூ.
பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், பண்பாடுகளைச் சேர்ந்த மக்களைக் கொண்ட சமூகமாக நமது இந்தியத் திருநாடு திகழ்கிறது. இத்தகைய பன்மைச் சமூகச் சூழலில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும்? முஸ்லிம் அல்லாத சமூகத்தாருக்கு மத்தியில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு இஸ்லாம் தருகின்ற அறிவுரைகள் யாவை? என்பன போன்ற கேள்விகளுக்கு மவுலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அழகிய முறையில் விளக்கம் அறித்துள்ளார். முஸ்லிம் அல்லாத நாட்டில் வாழ்கின்ற ஒரு முஸ்லிம், அந்த நாட்டின் நலம் நாடுபவனாகவே இருப்பான் என்பதை இஸ்லாமிய கோட்பாடுகள் மூலம் தெளிவுபடுத்துகிறார். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.
—-
மகாபாரதத்தில் கிருஷ்ணன், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 360, விலை 200ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-220-0.html இந்திய திருநாட்டின் இருபெரும் இதிகாசங்களில், மகாபாரதமும் ஒன்று. இதில் பல்வேறு கிளை கதைகள். ஏராளமான கதை மாந்தர்கள் இந்த இதிகாசத்தை தாங்கி நிற்பர். அதில் மிக முக்கிய இடம் பிடிப்பவர் கிருஷ்ணன். அவரை மையமாக கொண்டு, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. கிருஷ்ணன் ஜனனம் என, முதல் இயல் துவங்கி, கிருஷ்ண அவதார பூர்த்தியை தொடர்ந்து கீதை வரை, மகாபாரதத்தில் கிருஷ்ணனின் பங்கை, ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். மகாபாரத இதிகாசத்தில் மற்ற கதை மாந்தர்கள் பகுதிகளை, மிக சுருக்கி, தான் கையாள எடுத்துக்கொண்ட நாயகன், கிருஷ்ணன், இடம் பெறும் காட்சிகளை மட்டும், அழகான வர்ணனைகளோடு, தெளிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். இது நல்ல நூல். -சி. சுரேஷ். நன்றி: தினமலர், 1/6/2014.