இப்படிக்கு வயிறு
இப்படிக்கு வயிறு, விகடன் பிரசுரம்,757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 75ரு. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-080-2.html
நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் வயிற்றுக்கு பெரும் பங்கு உண்டு. நம் உயிரைக் காக்கும் வயிறு, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது. வயிற்றைப் பராமரிக்கும் வழிமுறைகளை இந்நூல் விவரிக்கிறது. வயிறே பேசுவது போன்ற பாணியில் புத்தகத்தை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார் டாக்டர் செல்வராஜன்.
—-
எழும்பிப் பிரகாசி, கவிஞர் பொன். செல்வராஜ், கவிஞன் பதிப்பகம், 28, பேபியன் மொழித்தோட்டம், திருநகர், செண்பகத்தோப்புச் சாலை, ராஜபாளையம் 626117, விலை 75ரூ.
குழந்தையின் அழகை வருணிக்கும் உவமைகள் அருமை. தவிர மனித நேயம், கல்வி, வாழ்வியல் பற்றிய கவிதைகள் உள்ளன. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.
—-
சைவ சித்தாந்த ஞானம், தொகுத்தவர்-டாக்டர் இராம. சிவசக்திவேலன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.
ஒழிவில் ஒடுக்கம் என்ற சைவ சித்தாந்த நூலை 14ம் நூற்றாண்டில் இயற்றியவர் ஸ்ரீகண்ணுடைய வள்ளலார் ஆவார். இந்நூலுக்கு அனைவரும் புரியும் வண்ணம் எளிய முறையில் சித்தர் மகரிஷி ஈஸ்வர பட்டா விளக்க உரை எழுதியுள்ளார். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளோர் படிக்க வேண்டிய நூல். நன்றி : தினத்தந்தி, 28/8/2013.
