கற்றது கடலளவு

கற்றது கடலளவு, து. கணேசன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 396, விலை 115ரூ.

சாண்டில்யனின் கடல்புறா நாவல், அந்தக் கால கடற்பயணத்தை விவரித்தால், அதற்கு சற்றும் சுவை குன்றாமல், நவீன கால கடற்பயணத்தை தொழில் அனுபவமாகவும், வாழ்க்கை அனுபவமாகவும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். கப்பல்களில் வேலை செய்வோர் நிறைய சம்பளம் வாங்குவதாக நினைப்போம். இதைப் படித்தால் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் இழக்கும் வாழ்க்கை எது? கடல் விபத்து, மனைவி மக்களைப் பிரிந்திருந்தால், விலை மாதர்களிடம் உடல் நலத்தை இழத்தல் என எத்தனையோ இழப்புகள் அனைத்தையும் தியாகம் செய்துதான் கப்பலில் வேலை செய்வோர் சம்பாதிக்கிறார்கள். தரையிலும், தண்ணீரிலும் வாழ்க்கையில் பெரிய வேறுபாடு இல்லை என்பதைக் காலம் உணர்த்துகிறது. படிக்கும் வாசகர்களும் உணர்ந்துகொள்ள முடிகிறது. கடற்பயணங்கள், கப்பல் நடைமுறைகள், குறித்து விவரமாகத் தெரிந்து கொள்ளவும், கப்பல் தொழிலில் சேர என்ன பயிற்சிகள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ளவும் உதவியாக இருக்கிறது இந்நூல். நன்றி: தினமணி, 16/9/12.  

—-

 

செம்மொழியும் சிவந்த ஈழமும், தஞ்சை இறையரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-798-9.html

சிந்தனையைத் தூண்டும் 16 கட்டுரைகளைக் கொண்ட நூல். எல்லாக் கட்டுரைகளும் தமிழின் பெருமையைக் கூறி தமிழ் உணர்வைத் தட்டி, எழுப்புகின்றன. சிவந்த ஈழம் என்ற கட்டுரை இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. நன்றி; தினத்தந்தி, 12/12/12.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *