இராஜாராம்
இராஜாராம், (சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு), வெ. ஜீவகுமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, விலை 60ரூ.
ஒளிக்கப்பட்ட தியாகங்கள் இராஜராஜ சோழனால் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் துவங்கி, கி.பி. 1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, தமிழர்களின் தனிப்பெருமையாய் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பின்னணியை விமர்சனபூர்வமாக ஆராய்கிறது இந்நூல். கோயில் கட்டிய மன்னக் பெயர், கோயிலுக்கு நிதி உதவி செய்த அரசன் வீட்டுப் பண்கள் உட்பட நிதியாளர்களின் பெயர்களையெல்லாம் பொறித்த அரசன், கோயில் கட்டிய தொழிலாளர்களின் பெயர்களை எங்கும் பொறிக்காதது ஏன்? இது போன்ற பல கேள்விகளை ஆசிரியர் எழுப்புகிறார். மாபெரும் அதிசயங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தனிமனிதர்களின் தியாகங்களையும், மறுக்கப்பட்ட நீதியையும் பற்றிய கவலைகளை இந்தக் குறுஆய்வு நூல் நம்முடன் பகிர்ந்துகொள்கிறது. -மு. முருகேஷ். நன்றி: தி இந்து, 2/5/2015.
—-
இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 130ரூ.
மனம் நிம்மதி இல்லாமல் தவிபோருக்கு உற்சாகம் அளிக்கும் புத்துணர்வு நூல். எக்காலத்திலும் படித்து ஆறுதல் பெறக்கூடிய கட்டுரைகளை படைத்திருக்கிறார் என். கணேசன். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.