இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு
இராமன் ஒரு மாபெரும் மனித குல விளக்கு, எஸ். ராமன், ஆங்கில மூலம்-எஸ். லட்சுமி நாராயணன், இந்துத்துவப் பதிப்பகம், 46, அனுமந்தபுரம், வி.ஆர்.பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, பக். 278, விலை 150ரூ.
ஸ்ரீ ராம பிரான் அவதரித்து 5000 ஆண்டுகள் ஆன பிறகும், அவருடைய மனிதாபிமான குணங்கள் இன்றும் பலருக்கு முன் மாதிரியாக இருந்து வழி காட்டும். ராமரின் வாழ்க்கைச் சம்பவங்களை நன்றாக அறிந்து கொண்டதால்தான், ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்க்கைப் பயணத்தை ஒழுங்காக நடத்த முடியும் என்று வாதிடும் ஆசிரியர், ராம பிரானின் சிறப்பு இயல்புகளை, சரித்திரக் கண்ணோட்டத்துடன் சொல்லிச் செல்கிறார். ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய சமய இலக்கியப் பொக்கிஷம். -எஸ். குரு.
—-
உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், கோபிநாத் மொகந்தி, முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்திய அகடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 208, விலை 125ரூ.
கோபிநாத் மொகந்தி, 1974ல் ஞான பீட விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர். இவர் எழுதிய சிறந்த 13 ஒரிய மொழிக் கதைகள், இந்தியர் பெரும் கவிஞர்களில் ஒருவரான சீத்தாகந்த் மகாபத் நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது. அருமையாக மொழி பெயர்த்திருக்கிறார் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், இந்த கதைகள் மொகந்திக்கு மலைக்குடி மக்கள் மீது இருந்த பேரன்பைக் காட்டும். சுதந்திரத்துக்குப் பின் இந்திய கிராமப் புறத்தில், புதிய அரசியலின் தாக்கம் எவ்வாறு பாதித்தது என்றும், இக்கதைகள் சொல்லும். -எஸ். குரு. நன்றி: தினமலர், 11/8/13.