இராமாயணத் தூமணிகள்
இராமாயணத் தூமணிகள், ஆ. கிருஷ்ணன், வானதி பதிப்பகம், 233, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, பக்கங்கள் – 1016, விலை 495ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-7.htm
இந்நூலாசிரியர் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரில் மேனேஜிங் டைரக்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2002 -ல் இவர் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் என்கிற பக்தி ததும்பும் நூல் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது தமிழில் வெளியாகியுள்ள இராமாயணத் தூமணிகள் என்ற இந்நூல் சற்று வித்தியாசமானது. தூமணிகள் என்பதற்கு தூய மணிகள் என்று பொருள். அந்த அடிப்படையில் இராமாயணத்தில் வரும் மிக முக்கிய கதாபாத்திரங்களான ராமன், சீதை, தசரதன், கைகேயி, லக்ஷ்மணன், பரதன், ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், குகன், சுக்ரீவன், அனுமன் ஆகிய பன்னிரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் சிலவற்றுக்கு தனிச் சிறப்புகளும் உயர்ந்த பண்புகளும் சில பலவீனங்களும் உண்டு. சிலவற்றுக்கு பிரமிக்கத்தக்க தீய குணங்களும், சில நல்ல குணங்களும் உண்டு. அவற்றை அலசி ஆராய்ந்து இந்நூலை இயற்றியுள்ளார். அதே சமயம், இது வெறும் ஆய்வு நூலாக மட்டும் இல்லாமல், ராமாயணக் கதையும் (உத்ரகாண்டம் தவிர்த்தது) முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. கதையின் போக்கு சிதைந்து விடாமல் எந்த நிகழ்ச்சியில் எந்த கதாபாத்திரம் எவ்விதம் தோற்றமளிக்கிறது என்பதை ஆய்வு ரீதியில் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூல், உறுதியான பைண்டிங்குடன் வெளியாகியுள்ளது சிறப்பானது. – பரக்கத். நன்றி: துக்ளக், 6 மார்ச் 2013.