இருட்டிலிருந்து வெளிச்சம்
இருட்டிலிருந்து வெளிச்சம், அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 320, விலை 240ரூ.
கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒரு சினிமா தயாரிப்பு கூடத்தில் பல ஆண்டுகள் பணிபுரிய நேராதிருந்த இத்தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் சாத்தியமாகி இருக்காது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். அசோகமித்திரன், கட்டுரையொன்றில் அன்றைய முன்னணி ஆண் நட்சத்திரங்களுக்கு எந்தவிதத்திலும் கஞைர்களாக நடிகைகள் தாழ்ந்து போய்விடவில்லை. இன்றைய தமிழ் படங்களின் கதாநாயகிகள் எண்ஜான் உடம்பையும் நாற்புறமும் அசைக்கவல்ல பொம்மைகளாகிவிட்டனர் என்ற கருத்து இன்று பலரிடமும் உள்ளது என்று ஆதங்கப்படுகிறார். தமிழில் இரண்டாவது உத்தம புத்திரன் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவருவதாகத்தான் இருந்தது. ஆனால் வீனஸ் பிக்சர்ஸ் இதில் முந்திக் கொண்டுவிடவே எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படத் தயாரிப்பு முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஜெமினி வாசன் தயாரிப்பில் உருவான ஔவையார் படத்தை ஜெமினி ஸ்டுடியோவின் ஏ பிரிவு பிரிவுயூ தியேட்டரில் நடைபெற்ற விசேஷக் காட்சியை அப்போதைய முதல்வரான ராஜாஜி முழுமையாகப் பார்த்தார். வெலிங்கடன் தியேட்டரில் டிக்கெட் வாங்கி இரண்டாவது மறையாக ஔவையார் படம் பார்க்கவும் ராஜாஜி சென்றார் என்பன போன்ற அதிகம் அறியப்படாததும் சுவாரசியமானதுமான எண்ணற்ற தகவல்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள், இதில் எழுதப்பட்டிருக்கும் திரைப்படங்கள் தங்களுக்குத் தந்த அனுபவங்களை அசைபோடலாம். இளைஞர்கள், தாம் இன்று பார்க்கும் திரைப்படங்களுக்கு இவ்வளவு நீண்ட செழுமையான கடந்த காலம் இருந்திருக்கிறதா? என்று வியக்கலாம். நன்றி: தினமணி, 31/12/2012.
—-
வேத நெறியும் சைவத்துறையும், சு. கோதண்டராமன், டி.எஸ். புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்மபலம், சென்னை 33, விலை 90ரூ.
வேதங்களில் உள்ள நெறி முறைகளையும், சைவ சமயத்தில் உள்ள நெறிமுறைகளையும் குறிப்பிட்டு இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 26/12/2012