திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம், நக்கீர்ன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-142-1.html

திராவிட இயக்கம், ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இந்த மண்ணில் வேரூன்றியுள்ள இயக்கம். இதைப்போல வேகமான வளர்ச்சியைக் கண்ட இயக்கமும் இல்லை. கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிற இயக்கமும் இல்லை. ஏனெனில், இயக்கத்தின் தாக்கம் அப்படிப்பட்டது. திராவிட இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட பிறகு, அதனை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பதே நோக்கம் என்றிருந்தவர்கள் இணைந்திருக்கிறார்கள். திராவிடம் என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டம் என வாதிடுபவர்கள் இருக்கிறார்கள். திராவிட இயக்கம்தான் தங்கள் வாழ்வை உயர்த்தியது என்பதில் உறுதிகொண்ட தலைமுறையினரும் இருக்கிறார்கள். இவ்வாறு திராவிடப் பேரியக்கம் வளர்ச்சியடைந்திருக்கிறது. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சொல்லாகவும், சக்தியாகவும் விளங்கும் திராவிட இயக்கம் ஏன் தோன்றியது? எதை முன்னிறுத்தி வளர்ந்தது? யாருக்காக பாடுபட்டது? இன்று பயணிக்கும் பாதை எது? அதன் எதிர்காலம் என்பது எப்படிப்பட்டது? என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நூல் விடை தருகிறது. கொள்கைகள் முதல் சாதனைகள் வரை அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கோவி லெனின். நன்றி : தினத்தந்தி, 28/8/2013.  

—-

 

மனம் மகிழுங்கள், நூருத்தீன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-8.html

மனிதர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியைத் தேடி ஓடுகிறார்கள். எந்திரமயமாகிவிட்ட வாழ்வில் மனமகிழ்வு என்பது பலருக்கு எட்டாக்கனியாக உள்ளது. இத்தகைய சூழலில் மன மகிழ்வுடன் வாழ வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும், எப்படி வாழப்பழக வேண்டும் என்பவை குறித்து இந்நூலில் எளிய வழிமுறையில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி, 28/8/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *