இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்
இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு தொகுதிகள்), ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம. குருமூர்த்தி, க. ஆறுமுகம், மணிவாசகம் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, நான்கு பாகம் (விலை முறையே ரூ. 125, 125, 150, 150).
இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளனர். கட்டுரையாளர்கள், பாரதியாரின் தேசிய உணர்வுகள், வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்தம், தமிழ்ப்பணி, கைலாசபதியின் பல வகை திறனாய்வு ஆகியவற்றை, முதல் தொகுதியில் ச.வே. சுப்பிரமணியன் காட்டியள்ளார். அண்ணாவின் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு, உவமைக் கவிஞர் சரதாவின் இலக்கியப் பணி, வல்லிக்கண்ணனின் கவிதை அழகு போன்றவற்றை கட்டுரையாளர்களின் வாயிலாக இரண்டாம் தொகுதியில் காட்டப்பட்டுள்ளது. தமிழைக் காக்க ஓலைச்சுவடிகளை கண்டுபிடித்து அவற்றை பதிப்பித்து, இலக்கியங்களை வரிசைப்படுத்திய உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், கண்ணதாசன் மற்றும் பலரைப் பற்றிய கட்டுரைகள் மூன்றாம் தொகுதியில் சிறப்பாக உள்ளன. தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. மூவேந்தர்கள் நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. மூவேந்தர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்ற அறிஞர்களின் கூற்றை மாற்றி, சங்க காலத்தில், மூவேந்தர்கள் நாணயங்கள் வெளியிட்டனர் என்பதை நிரூபித்துள்ளார். தினமலர் நாளிதழ் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள். பெரியாரின் எழுத்து சீர்த்திருத்தத்தை இவர் 1977ம் ஆண்டு நடைமுறைப்படுத்தினார். ஸ்ரீலிபி எழுத்து வடிவத்தை கணினியில் 1987ம் ஆண்டு பயன்படுத்தி மறுமலர்ச்சி செய்தார் என்ற தகவல் சிறப்பானது. தமிழறிஞர்கள் அறவாணன் மற்ற பல தமிழ்க்கவிஞர்கள், கட்டுரையாளர்கள், இலக்கிய திறனாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்களைப் பற்றி சுருக்கமாகவும், தெளிவாகவும் தரப்பட்டிருப்பது இந்நுநூலின் சிற்பாகும். -குமரன். நன்றி:தினமலர், 8/4/2012,