இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்
இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130)
சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013).
—–
ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: மலர்மகன், வெளியிட்டோர்: இலக்கியவீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை – 101, விலை: ரூ. 80)
மேடைகளில் அரங்கேறிய தனது கவிதைகளின் தொகுப்புகளை ஒன்றாக சேர்த்து நூலை அலங்கரித்துள்ளார். 21 தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் ஆங்காங்கே இழைந்தோடுகின்றன. கவிஞர் ஆசிரியராக பாணியாற்றியதால் இலக்கிய நயத்துடன் சொற்களை பயன்படுத்தி கருத்தாழம் மிக்க சீரிய சிந்தனைகளை விதைத்து இருப்பதையும் காண முடிகிறது. நன்றி: தினத்தந்தி (13.3.2013).
—–
நிமிடத்தில் திருமணப் பொருத்தங்கள் (ஆசிரியர்: ஜோதிட ரத்னா ஜி.ரவீந்திரநாத், வெளியிட்டோர்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை – 17, விலை: ரூ. 60)
தலைப்பிற்கு ஏற்றபடி நிமிடத்தில் திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013).