இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரன் மெக்ரீடி, தமிழில் எஸ்.ராமன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 512, விலை 300ரூ.

சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை பின்பற்றி, ஒரு தமிழர் அடைந்த வெற்றியை விவரிக்கிறது, இந்த நூல். ஆஸ்திரேலியாவில், கிரேட்டர் ஸ்பிரிங் பீல்டு என்ற மாபெரும் நகரத்தை உருவாக்கிய, தமிழரான, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாற்றை நூல் விவரிக்கிறது. விவேகானந்தரின் தத்துவத்தை முதலில் விவரித்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்ப்பதில், நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மஹா சின்னத்தம்பி தோல்வியை, நெருக்கடிகளை சந்தித்தபோது, அவரது மனநிலையை ஆசிரியர், இவ்வாறு விவரிக்கிறார். தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்தவை தான் வாழ்க்கை. கஷ்டங்கள் என்பவை, நம்மை முடங்க செய்வதற்கு வந்துள்ள அழைப்புகள் அல்ல. அவை, நம்மை தீர யோசிக்க வைத்து, நம்முள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்ந்து, நம்மை பற்றியே, நமக்கு நன்கு உணர வைக்கும் அழைப்புகள். சாதனையாளரின் வரலாறு வழியே, ஒரு தன்னம்பிக்கை நூல்! -சி. கலா தம்பி. நன்றி:தினமலர், 20/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *