இஸ்லாத்தில் முன்னுரிமைகள்
இஸ்லாத்தில் முன்னுரிமைகள், மௌலவி நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 90ரூ.
ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் நம் முன்னே நிற்கின்றன. இதில் எதற்கு முன்னுரிமை கொடுபப்து? இடம், பொருள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னுரிமை கொடுக்க வேண்டிய அம்சங்களை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் இஸ்லாத்தில் எந்தெந்த செயலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நூஹ் மஷ்ழரி இந்த நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார். தனி மனித நலனா? சமுதாய நலனா? எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றால், சமூக நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் ஹஜ் செய்வது சிறந்ததா? அல்லது சொந்த ஊரின் தேவைகளைப் பார்ப்பது சிறந்ததா? என்றால், ஒருமுறை ஹஜ் செய்த பிறகு ஊர் மக்களின் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பன போன்ற ஆணித்தரமான பதில்கள். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.
—-
வெற்றிப் பாதையை நோக்கி நட, கல்பனா சுப்பிரமணியன், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ. சின்ன சின்ன கவிதைகள் கொண்ட புத்தகம். கவிதைதான் சிறியதே தவிர,அதில் அடங்கிய கருத்துக்கள் பெரியவை. நன்றி: தினத்தந்தி, 20/1/2016.