உட்கவர் மனம்
உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழில்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 446, விலை 250ரூ.
மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்திய டாக்டர் மரியா மாண்டிசோரி, இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம், அகமதாபாத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு The Absorbment Mind என்னும் நூல் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு. அதன் தமிழாக்கமே இந்நூல். குழந்தையின் தனிப்பட்ட மன ஆற்றலை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆசிரியர் இல்லாமல், சாதாரணமாகக் கருதப்படும் எவ்விதக் கல்வித் துணைக் கருவிகளுமில்லாமல், பெரும்பாலும் கவனிப்பாரற்றும் தடை செய்யப்பட்டும் இருந்தாலும், மிகச் சில ஆண்டுகளுக்குள் மனித ஆளுமையின் எல்லாச் சிறப்பியல்புகளையும் குழந்தை தனக்குள் தானாகவே உருவாக்கிகொள்கிறது. குழந்தை பிறக்கும்போது அதன் நிலை பூஜ்யம் எனலாம். இந்நிலையில் இருக்கும் குழந்தை ஆறு வயதுக்குள் எல்லா இனங்களையும் விட முன்னேறிவிடுகிறது. இது வாழ்க்கையின் அற்புதங்களுள் ஒன்று. இவ்வாறு குழந்தையின் சிறப்புத்தன்மைகள் கூறப்படுகின்றன. மாண்டிசோரி, குழந்தைகளிடம் கண்ட தெய்வீகச் சிறப்புக்கும் இன்று நாம் நம் குழந்தைகளைக் கையாளுவதற்கும் உள்ள முரண்பாடுகளால், அக்குழந்தை தன் பரம்பரைக்கே தொல்லை தரும் முறையில் வளர்கிறது என்ற எச்சரிக்கையைப் பெற்றோருக்கு குறிப்பாக இளம் பெற்றோருக்கு இந்நூல் விடுக்கிறது. நன்றி: தினமணி, 23/12/13.