உலகத்தின் தோற்றமும் வரலாறும்
உலகத்தின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ரத்னம், சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 170ரூ.
சுமார் 460கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து தெறித்து வந்த ஒரு அக்கினிப் பிழம்புதான் பிறகு பூமியாக மாறியது. அதன்பின் ஜீவராசிகள் தோன்றின. காட்டிமிராண்டியாக வாழ்ந்த மனிதன், பல ஆண்டுகளுக்குப்பின் படிப்படியாக கற்கால மனிதனாக மாறினான். உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பூமியின் வரலாற்றை கதைபோல் கூறுகிறார் ஆசிரியர். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.
—-
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி, செந்தமிழ்க்கிழார், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
போலீசில் புகார் செய்வது எப்படி? தன் வழக்கில் தானே ஆஜராவது எப்படி? அவதூறு என்பது என்ன? போலுசார் கைது செய்தால் என்ன செய்ய வேண்டும்? நீதிபதியிடம் ஜாமீன் கேட்பது எப்படி? பொய் வழக்கில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? இதற்கெல்லாம் விடை இந்த நூலில் உள்ளது. நீதித்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை, கேள்வி பதில் ரூபத்தில் எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.