உலகைக் கவர்ந்த உன்னதக் கதைகள்
உலகைக் கவர்ந்த உன்னதக் கதைகள், சாகம்பரிதாசன், எம்.ஏ. ஜெய் ஷங்கர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, அய்யர்தெரு, தி.நகர், சென்னை 17, விலை 60ரூ.
சிறுகதைகள் எப்போதுமே ரசமானவை. படிக்க சுவாரசியமானவை. அதிலும் உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளை படிக்கும்போது அதன் சிறப்பு இன்னமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்நூலில் உலகப் புகழ்பெற்ற 8 சிறுகதைகளை தொகுத்து தந்திருக்கிறார்கள். பணக்கார தோழியின் நெக்லசை இரவல் வாங்கி தொலைத்துவிட்டு அதனால் அவதிப்பட்ட நடுத்தர வர்க்க பெண்ணின் போராட்டத்தை சொல்லும் நெக்லஸ் ஓ நெக்லஸ் தொடங்கி அத்தனை கதைகளிலும் ஆச்சரியம் மிளிரும் ஒரு ட்விஸ்ட் அமைந்து கதைகளை எதிர்பார்ப்புடன் ரசிக்க வைக்கிறது. உலகப்புகழ் பெற்ற கதைகள் என்பதால் ஒவ்வொரு கதையும் எந்த நாட்டு எழுத்தாளரால் எழுதப்பட்டது என்ற தகவலையும் தந்திருக்கலாம்.
—-
அழகிய தமிழ் மூலும் ஆங்கிலம், சி.என். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
பட்டி தொட்டியைச் சேர்ந்த பாமர மக்களும் மற்றும் அனைவரும் எளிய முறையில் ஆங்கிலம் கற்க உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க, பேச, எழுதவும் இந்த நூல் துணை புரியும்.
—-
உனது விழியசைவில்,பொ. அ. ராஜ்குமாரன், ஸ்ரீசண்முக பாண்டியன் பதிப்பகம், 770, ஹவுஸிங் யூனிட், ராஜ கோபாலபுரம், புதுக்கோட்டை 622004, ஒவ்வொரு புத்தகமும் விலை 90ரூ.
புத்தகத்தின் அமைப்பே அசர வைக்கிறது. முழுவதும் ஆசிட் காகிதத்தில் வண்ணப்படங்கள், மனதைத்தொடும் காதல் கவிதைகள், மருத்துவர் பொ. அ. ராஜ்குமாரனின் கைவண்ணத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்க முடிகிறது. அவருடைய மற்றொரு புத்தகம் மவுனமான காதலுக்கு. இதுவும் அழகிய வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 29/5/13.