உளிகள் வடித்த துளிகள்

உளிகள் வடித்த துளிகள், தலைமையாசிரியர் யா.ச.யாகு அடிகள், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், சிவகங்கை மாவட்டம், விலை 100ரூ.

சிவகங்கை மாவட்டம், தேகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் 27 ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். நல்லொழுக்கம் நலவாழ்வு, இதயம் ஒரு கோவில், ஏணியாய் தோணியாய என்ற தலைப்புகளில் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி.  

—-

வரலாற்று வெளிச்சத்தில் போர்த்துகீசியர்கள், குஞ்ஞாலிகள், சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 500ரூ.

இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, வியாபாரம் செய்ய வந்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். இந்தியாவுக்கு வந்த முதல் போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடாகாமா, 1498ம் ஆண்டு மே மாதத்தில், கேரளாவில் கள்ளிக்கோட்டைக்கு 8 மைல் வடக்கே உள்ள கப்பாடு என்ற சிறிய கிராமத்துக்கு கப்பலில் வந்து சேர்ந்தான். அதன்பின் பலமுறை இந்தியாவுக்கு வந்து சென்றான். இந்தியாவை கைப்பற்றிக்கொள்ள போர்ச்சுகீசியர்கள் திட்டமிட்டனர். ஏற்கனவே இந்தியாவில் வர்த்தகம் செய்து வந்த முஸ்லிம்கள்(குஞ்ஞாலிகள்) போர்ச்சுகீசியர்களுடன் போர் புரிந்தனர். பல்வேறு கட்டங்களில் நடந்த போர்களில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். வரலாற்று அறிஞர் செ. திவான், பல ஆண்டுகள் ஆராய்ச்சிகள் நடத்தி இந்த நூலை எழுதியுள்ளார். போர்கள், படுகொலைகள் பற்றி அவர் வெளியிட்டுள்ள விவரங்களைப் படிக்கும்போது திகிலூட்டும் ஹாலிவுட் படங்களைப் பார்ப்பது போல் உள்ளது. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *