ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும்
ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும், வே. கலியமூர்த்தி, சுடரொளிப் பதிப்பகம், 99/அ, 3, பாஞ்சாலியம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 416, விலை 150ரூ.
ஊரகப் பொருளாதாரத்தைப் பற்றியும் வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பற்றியும் பேராசிரியரால் எழுதப்பட்ட இந்த நூல் இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். இந்நூலைப் படிக்கும் மாணவர்கள் இத்துடன் நில்லாமல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் பட்டியலைக் கொண்டு மூலநூல்களையும் படிப்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும். பட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்காகவும், நூல் பயன்படக்கூடும். இந்நூலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகளாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி 4/3/2013.
—-
அலைகளின் நடுவே, கவிஞர் பாகன், சிந்தனை பதிப்பகம், 42, அரிதாஸ் 2வது தெரு, கொளத்தூர், சென்னை 99, விலை 60ரூ.
கவிதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். தந்தை சொல் என்ற கவிதையில் மலிவு விலை சரக்கான சாரயத்தை நாடிச் சென்றேன், நாள் முழுவதும் உழைத்த பின்னே, கிடைத்த கூலி நாலுகாசில பாதிக்கு மேல் காசுதனை போதைக்காக எடுத்த பின்பு, பானை நீரை உட்கொண்டு பட்டினியாய் படுத்துறங்கி பாவம் அவள் நைந்தே போனாள்… போன்ற வரிகளின் மூலம் குடியால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்டு காட்டுகிறார் ஆசிரியர் கவிஞர் பாகன்.
நன்றி:தினத்தந்தி, 22/2/2012.
—-
கண்மணிப் பூங்கா, லெட்சுமணன், ராசையா பதிப்பகம், சீனிகுடிகாடு மேலத் தெரு, மூவர்கோட்டை அஞ்சல், திருவாரூர், விலை 50ரூ.
குழந்தைகளுக்கான கவிதை தொகுப்பு. இதில் வானவில், நாய்க்குட்டி, குதிரை, மான், ஒட்டகம், வாத்து போன்ற தலைப்புகளில் சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி உள்ளார் ஆசிரியர் லெட்சுமணன். நன்றி:தினத்தந்தி, 22/2/2012.