செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்,

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப்பதிப்பகம், இடைக்கட்டு, உள்கோட்டை அஞ்சல், கங்கை கொண்ட சோழபுரம் (வழி), அரியலூர் மாவட்டம் – 612901, விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாற்றைப் பண்பாட்டை புலவர்களும் அறிஞர்களும் பலவிதங்களில் ஆய்ந்து எடுத்துரைத்துள்ளனர். அவ்வரிசையில் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியிருக்கும் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற நூலும் ஒன்றாக இருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக கரிகால்ச்சோழனின் வரலாற்றையும் கலிங்கத்தில் இருந்து காரவேலன் படையெடுப்பையும் விளக்கும் அவர் கரிகாலனின் வீரத்தைப் […]

Read more

ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும்

ஊரகப் பொருளாதாரமும் வேளாண்மைப் பொருளாதாரமும், வே. கலியமூர்த்தி, சுடரொளிப் பதிப்பகம், 99/அ, 3, பாஞ்சாலியம்மன் கோவில் தெரு, அரும்பாக்கம், சென்னை 106, பக். 416, விலை 150ரூ. ஊரகப் பொருளாதாரத்தைப் பற்றியும் வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பற்றியும் பேராசிரியரால் எழுதப்பட்ட இந்த நூல் இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும். இந்நூலைப் படிக்கும் மாணவர்கள் இத்துடன் நில்லாமல் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நூல் பட்டியலைக் கொண்டு மூலநூல்களையும் படிப்பது அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும். பட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகளுக்குத் […]

Read more