ஊழல் நம் பிறப்புரிமை

ஊழல் நம் பிறப்புரிமை, துக்ளக் சத்யா, ஆதாரம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-248-0.html துக்ளக் வாசகர்களுக்கு இந்நூலாசிரியர் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சீரியஸான அரசியலையும், நாட்டு நடப்புகளையும் நகைச்சுவைப் பாணியில் படிப்பவர்கள் மட்டுமல்ல, விமர்சிக்கப்படுபவர்களும்கூட மெய்மறந்து சிரிக்கும்படி எழுதுவதில் இந்நூலாசிரியர் கைதேர்ந்தவர். இவரது அரசியல் கற்பனைக் கட்டுரைகளைவிட, நாட்டு நடப்புகள் குறித்த நையாண்டி உரையாடல் கட்டுரைகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பவை. துக்ளக்கில் பல்வேறு கட்டங்களில் வெளியாகி, வாசகர்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்ற 25 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. சென்ஸஸ் கேள்விகளும், குடிமகன் பதில்களும் என்ற முதல் கட்டுரை, அடித்தட்டு நிலையில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் நிலையை யதார்த்தமாக பிரதிபலிப்பவை. பெயர் என்ன என்று ஆரம்பித்து தொழில், வருமானம், சொத்து, வீட்டு முகவரி, குடும்ப உறுப்பினர்கள், கடன்கள், அரசாங்க சலுகைகள், குடும்ப வாழ்க்கை… என்று சென்ஸஸ் அதிகாரி கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கும், குடும்பத் தலைவர் அளிக்கும் பதில்கள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைத்தாலும், கூடவே இழையோடிய சோகத்தையும் கூட்டி வருகிறது. எக்காலத்திற்கும் இக்கட்டுரை பொருந்தக்கூடியது. இது போன்றே இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளும் பல்வேறு வகையில் நாட்டு நடப்புகளை நகைச்சுவையோடு பிரதிபலிப்பவை. -பரக்கத். நன்றி: துக்ளக், 9/7/2014.  

—-

சிந்தனைச் சுரங்கம், கா. திரவியம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 425ரூ.

தமிழக அரசு தலைமைச் செயலாளராக பணிபுரிந்தவர் கா. திரவியம். சிறந்த தமிழறிஞர். எழுத்திலும், பேச்சிலும் வல்லவர். தேசீயம் வளர்த்த தமிழ் உள்பட பல சிறந்த நூல்களை எழுதியவர். உலகின் தலைசிறந்த அறிஞர்களின் பொன்மொழிகளை அவர் பல ஆண்டு காலம் சேகரித்து வந்தார். அதை நூலாக வெளியிடுவதற்கு முன் அவர் மறைந்துவிட்டார். அவர் துணைவியார் திருமதி லீலா திரவியம், பதிப்பாசிரியராக இருந்து, இப்போது நூலை தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளார். 415 பக்கங்கள் கொண்ட பெருநூல் இது. தமிழில் பொன்மொழிகள் கொண்ட இவ்வளவு பெரிய நூல் இதுவரை வந்ததில்லை. திருவள்ளுவர், பட்டினத்தார், மகாகவி பாரதியார் போன்ற தமிழ்நாட்டு தவப்புதல்வர்களின் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய சிந்தனைக்கு விருந்தளிக்கக்கூடிய சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 2/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *