நினைவில் நிற்கும் ஆசிரியர்
நினைவில் நிற்கும் ஆசிரியர், டாக்டர் ஆர். நடராஜன், ஆதாரம் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. லட்சியவாதிகளாய் திகழ்ந்த ஆசிரியர்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன், தமிழக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருந்த ஆசிரியர்களில் பலர், மிகுந்த அறிவாளிகளாகவும், லட்சியவாதிகளுமாய் திகழ்ந்தனர். தம் ஆசிரியப் பணியில் மிக மிக ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வோடும் விளங்கினர். தம்மிடம் பயிலும் மாணவர்களுக்குத் தங்கள் சொந்தப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது போன்ற அக்கறையுடன் பாடம் நடத்தினர். நூலாசிரியர், அப்படிப்பட்ட ஆசிரிய ரத்தினங்களிடம் பயின்று, இன்று சமூகத்தில் மிக உயரிய நிலையில் இருப்பவர். […]
Read more