காசுக்காக தேசத்தை
காசுக்காக தேசத்தை, எம்.ஆர். வெங்கடேஷ், தமிழில் ஆர். நடராஜன், ஆதாரம் வெளியீடு, ரேர் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 176, விலை 150ரூ.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையின் சரிவை எண்ணி மனம் வெதும்பி ஆடிட்டர் வெங்கடேஷ் எழுதிய டாக்டர் மன்மோகன் சிங் ஏ டிகேட் ஆஃப் டிகே எனும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்புதான் இந்த நூல். 32 கட்டுரைகள் தொகுப்பான இந்நூல் பொருளாதாரம், கருப்புப் பணம் எப்படி வெள்ளைப் பணம் ஆக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க அரசு சுணக்கம் காட்டுவது ஏன்? 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில், தற்போது பெரும் சரிவை சந்தித்துள்ளது ஏன்? எனப் பல்வேறு கூறுகளை அலசி ஆராய்கிறது. ஆதாயத்தை கருத்தில்கொண்ட அரசின் கொள்கைகள் உருவாக்கப்படுகிறது என்று, மக்கள் நம்பும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதைத் தெள்ளத் தெளிவாக புத்தகம் எடுத்துரைக்கிறது. வரி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், வரியை எப்படி ஏய்ப்பது என்று அறிவுறுத்த அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். 1961ஆம் ஆண்டுக்குப் பின் வரிச்சட்த்தில் இதுவரை 7500 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம். இருந்தபோதும், வரி ஏய்ப்பு மட்டும் குறையவில்லை. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் சிலரின் கணக்கு விவரங்களும் உள்ளன என்று ஜெர்மன் தெரிவித்தபோதும், அதனை இந்திய அரசு கேட்டுப் பெறாதது அரசை உருவாக்கிய நமக்குக் கிடைத்த பரிசு என்ற உண்மையை ஆசிரியர் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். நன்றி: தினமணி, 2/6/2014.