எண்களின் எண்ணங்கள்
எண்களின் எண்ணங்கள், இரா. சிவராமன், பை கணித மன்றம், சென்னை 94, பக். 184, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-080-8.html
கணிதம் கற்பது கசப்பல்ல, மகிழ்ச்சி என்பதை விளக்கும் அழகிய நூல். ஆங்கிலத்தில் அல்லாமல், தமிழில் வண்ணப்படங்களுடன் எழுதிய விதம் பாராட்டுதற்குரியது. எண்களின் மீது நம்நாட்டு மக்களுக்கு அரிய பற்று உண்டு. அதனால்தான் இந்தியர் கணிதத்திறமையை, அமெரிக்க அதிபர் ஒபாமா வியக்கிறார். எறும்புகள் இலக்கை நோக்கி பயணிப்பதில் உள்ள கணித தத்துவம், பூக்கள் காயாக மாறும் தன்மையில் அடங்கிய கணிதம். ஒன்றையொன்று அடித்து சாப்பிடும் பூச்சிகள் வாழும் கால அளவை கணக்கிட்டு அதில் உருவாகும் அரிய செய்தி என்று பல தகவல்கள் உள்ள நூல் வரைபடங்கள், விளக்கங்கள் வண்ணத்தில் உள்ளன. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் முதல் மாணவ, மாணவியரும் புரட்டிப் பார்த்து, புரிந்து கொண்டு கணிதத்தில் ஆர்வம் பெற நல்லநூல் தமிழில் வெளிவந்திருப்பதால், இதன் விலை அதிகம் இல்லை. -பாண்டின். நன்றி: தினமலர், 17/3/2013
—-
ஆச்சாள்புரம், வையவன், தாரிணி பதிப்பகம், 1, முதலாவது தெரு, சந்திரபாக் அவென்யூ, மயிலாப்பூர், சென்னை 4, பக். 148, விலை 100ரூ.
ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதி. வாழ்க்கையின் முட்களில் அழுத்தி, ரத்தம் கக்குகிற ஆன்மாக்களை, இந்தக் குறுநாவல்களில் தரிசிக்க முடிகிறது. காதல் தோல்வி, தாசிப் பெண்ணின் அவல வாழ்க்கை, தேச விடுதலைக்காகக் காதல் தோழியை மறக்கும், தேச பக்தன் என்றெல்லாம், சோக ரசம் இழையோடும் கதைகளை, ஆசிரியர் எழுதும்போது, உள்ளம் கனத்துப் போகிறது. கண்ணீர்த் துளி வர உள் உருக்குதல் என்ற கலையில் வல்லவராக இருக்கிறார் ஆசிரியர் வையவன். -எஸ். குரு. நன்றி: தினமலர், 17/3/2013 எண்களின் எண்ணங்கள்