எது சரியான கல்வி
எது சரியான கல்வி, முனைவர் வெ. இறையன்பு, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 25ரூ.
மதிப்பெண் தேடும் கல்வியைத் தாண்டி வாழ்வியல் மதிப்புக்களை நாடும் கல்வியாக படிப்புமுறை எப்படி மாற வேண்டும் என்பதை நூலாசிரியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனைவர் வெ. இறையன்பு சிந்தனைச் சுவைபட எளிய நடையில் இந்த நூலில் கூறி உள்ளார். முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்வி தான் என்றும், மனப்பாடம் செய்வதை கற்றுக் கொள்வதையே கல்வி என எண்ணுபவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நூலாசிரியர் ஆணித்தரமாக கூறியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/3/2014.
—-
ஊரடங்கு இரவு, பஷரத் பீர், தமிழில் க. பூர்ணச்சந்திரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 280, விலை 225ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-196-4.html காஷ்மீரில் 1989இல் பிரிவினைவாத இயக்கம் வெடித்ததிலிருந்து இன்றுவரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை நிகழ்வுகளைச் சித்தரிக்கும் நூல். பிரிவினைவாதிகளின் செயல்கள், இந்திய மற்றும் பாகிஸ்தானிய ராணுவங்களின் நடவடிக்கைகளினால் காஷ்மீரில் வாழும் சாதாரண மக்கள் படும்பாடுகளை, வேதனைகளைச் சொல்கிறது. பத்திரிகையாளரான நூலாசிரியர் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பலதரப்பட்ட மக்களைச் சந்தித்துப் பெற்ற அனுபவங்களும் பதிவாகியுள்ளன. என் பிரயாணங்களில் இரண்டு சொற்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன. தீவிரவாதிகள், சிப்பாய்கள், விருந்தோ, சவ அடக்கமோ, பாழ்பட்ட தர்காவோ, புனரமைப்புப் பெற்ற சித்திரவதைக் கூடமோ, முகமறியாதவரைப் பற்றிய வருணிப்போ என் சொந்தக் கதையோ, கவிதையோ, ஓவியமோ இந்த இரு சொற்கள் மீண்டும் மீண்டும் வந்த வண்ணமே உள்ளன. என் வாழ்க்கை உட்பட நான் எழுதிய யாவற்றிலும் இவற்றின் இருப்பு நிறைந்திருக்கிறது என்று நூலாசிரியர் சொல்வது இந்நூலின் சாரத்தைச் சொல்வதாகவே உள்ளது. காஷ்மீரின் சமகால வரலாற்றை உணர உதவும் நூல். நன்றி: தினமணி, 8/10/2012.