எனக்கு எதுவோ உனக்கும் அதுவே

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே – இளையராஜா; பக்.144; ரூ.150; குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, சென்னை-10

இசையமைப்பாளர் இளையராஜாவின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் கவித்துவமான சிந்தனைகளை தத்துவார்த்தரீதியில் வெளிப்படுத்தும் தொகுப்புதான் இந்நூல். இளையராஜா ஆன்மிகம் குறித்தே அதிகம் சிந்திக்கிறார் என்பதற்கு இதில் உள்ள பல கவிதைகள் சான்று. “நடுத்தர வயதிலேயே பாம்பு சட்டையை உரிப்பதைப் போல, பசுமரம் பட்டையை உரிப்பதைப் போல, உலகாயத விஷயங்களை உதறி தாமரையிலைத் நீராய் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கப் பயின்றவர்’ என்று கவிஞர் வாலி நூலின் அணிந்துரையில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இத்தொகுப்பைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ளலாம். “ஒருவன் மகிழ்ச்சியாக இருக்க அவனுக்குத் தேவை அவன் மனம் மட்டுமே! ஆனால், அதை வைத்துக் கொண்டு அவன் துக்கத்தை மட்டுமே அனுபவிக்கிறான்’ என்ற வரிகள் மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது. நூலின் அச்சும் வடிவமைப்பும் நேர்த்தியாக இருக்கின்றன. நன்றி: தினமணி, 06.08.2012 புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-373-5.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *